தமிழகத்தின் 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது – தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
சென்னை: தமிழகத்தின் 21 மாவட்டங்களில் ஓராண்டில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது பெரும் தண்ணீர் பஞ்சத்திற்கு வழிவகுக்கும் எனத் தெரிகின்றது.
தமிழகத்தில் திருவண்ணாமலை, கோவை, தேனி, திருச்சி, திருநெல்வேலி உட்பட 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதாக, நீர்வள ஆதார விவர குறிப்பு மைய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறித்து, மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இதற்காக அமைக்கப்பட்டுள்ள 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்படுகிறது.
தமிழகத்தில் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் நீர் அளவு, மொத்தமாக ஒவ்வொரு மாதமும் நீர்வள ஆதாரத்துறை மூலம் கணக்கிடப்படுகிறது. அது புள்ளிவிவரங்க ளாக தொகுக்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததும், அதிகப்படியான நிலத்தடி நீர் சட்ட விரோதமாக எடுக்கப்பட்டதன் காரணமாக நிலத் தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து கொண்டே வருகிறது.
இதனால், ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. கடந்த மே மாதம் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த 2013, மே மாதத்தை ஒப்பிடுகையில் தமிழகத்தில் திருநெல்வேலி, திருவண்ணாமலை, தேனி, கோயமுத்தூர், திண்டுக்கல், திருச்சி உட்பட 21 மாவட் டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.
கன்னியாகுமரி, கரூர், கடலூர், நீலகிரி உட்பட 11 மாவட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications