ஜெ. பிரதமரானால் இந்தியா தமிழ்நாடு போலாகி விடும்.. 'குண்டு' கல்யாணம்!
Subscribe to Oneindia Tamil
மானாமதுரை: ஜெயலலிதா பிரதமர் பதவிக்கு வந்தால்தான் தமிழகம் அடைந்த நன்மைகளை இந்தியாவும் அடைய முடியும் என்று நடிகர் குண்டு கல்யாணம் பிரசாரம் செய்து பேசினார்.
சிவகங்கை தொகுதி் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து கல்யாணம், மானாமதுரையில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், அதிமுக ஆட்சியில் தமிழக மக்கள் பல நன்மைகளை அடைந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா மக்கள் நலனில் அக்கறையுடன் ஆட்சி நடத்துகிறார்.
தமிழகத்தில் நடக்கும் நல்ல திட்டங்கள் நாடு முழுவதுமுள்ள மக்களைச் சென்றடைய வேண்டுமானால் ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும் அதற்கு தமிழகத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும். சிவகங்கைத் தொகுதியில் வாக்காளர்கள் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரிக்க வேண்டும் என்றார் குண்டு கல்யாணம்.












Click it and Unblock the Notifications