சிம்ம ராசியில் ஜென்ம குரு... ஜெயலலிதாவுக்கு ஆகாது?
சென்னை: குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த குருபகவான் ஜூலை 5ம் தேதி இரவு 10.55 மணிக்கு கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். இந்த குரு பெயர்ச்சி ஜெயலலிதாவின் ராசியான சிம்மராசிக்கு ஜென்மகுருவாக இருப்பதால் சில பாதக பலன்களையே தருவார் என்கின்றனர் ஜோதிடர்கள்
ஜென்மத்தில் குரு அமர்வது தீங்கு என்றே பலர் சொல்வார்கள். இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். இந்த ஜென்ம குரு நடக்கும் காலத்தில் புத்தி தடுமாற்றம், பாதை மாறிப் போதல் போன்றவை ஏற்படும். மாறுபட்ட சிந்தனை, தீய எண்ணம் ஏற்படும். எனவே ஜென்ம குரு நடக்கும் காலக்கட்டத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜென்ம குரு நடக்கும்போது புத்தி வேலை செய்யாது என்றும் கூறுவார்கள்.

வனவாசம்
ஜென்மத்தில் குரு அமர்ந்தால் வனவாசம் செல்ல நேரிடும். பகவான் ராமர் கூட வனவாசம் சென்ற போது அவருக்கு ஜென்மத்தில் குரு இருந்தது. இன்றைய கால கட்டத்தில் வனவாசம் என்றால் நிம்மதி இல்லாத நிலை, எதையோ இழந்ததைபோல மனது அலைபாயும். அந்தஸ்து குறையும். அலைச்சல் அதிகமாகும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

முன்னெச்சரிக்கை தேவை
05.07.2015 முதல் 02.08.2016 வரை ஜென்ம இராசியில் குரு சஞ்சரிக்க இருப்பதால் நீங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது, உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். 02.08.2016 முதல் 02.09.2017 வரை குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் யாவும் படிப்படியாக விலகி பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இது சிம்மராசிக்காரர்களுக்கு பொது பலன்.

ஜெயலலிதா ராசிக்கு
சிம்மராசி ஜெயலலிதாவின் ராசி. சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை பெற்று மீண்டும் முதல்வராக அமர்ந்துள்ளார் ஜெயலலிதா. அவரது ராசியான சிம்மத்தில் ஜென்மகுருவாக அமரப்போகிறார் குருபகவான்.

பதவியிழந்த ஜெயலலிதா
சிம்ம ராசிக்கு 12ல் குரு அமர்ந்த காரணத்தால் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தினார். ராமாயணத்தில் ராவணனின் ராசிக்கு குரு 12ல் அமர்ந்த போதுதான் ராவணன் பதவிகளை இழக்க நேர்ந்தது. முடிதுறந்தான் ராவணன். அவமானப்பட்டான். அதேபோலத்தான் 12ல் அமர்ந்த குருவால் ஜெயலலிதா சிறை சென்றதோடு தனது முதல்வர் பதவியிழந்து அவமானத்தை சந்தித்தார்.

சனிப்பெயர்ச்சியும் சரியில்லை
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சனிப்பெயர்ச்சியும் சரியில்லை எனவேதான் அமைச்சர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை கோவில் கோவிலாக நேர்த்திக்கடன் செலுத்தினர். எப்போதோ எங்கேயோ செய்த புண்ணியம் குமாரசாமி ரூபத்தில் வந்து விடுதலை என்ற தீர்ப்பு எழுத வைத்துவிட்டது.

கும்பிடும் சாமியான குமாரசாமி
அதுமுதல் அதிமுகவினரால் தெய்வமாகவும் எதிர்கட்சியினரால் வில்லனாகவும் சித்தரிக்கப்படுகிறார் குமாரசாமி. அதிமுகவினர் தங்களின் குழந்தைகளுக்கு குமாரசாமி என்று பெயர் சூட்டி நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

ஜென்மத்திற்கு வரும் குரு
அதேநேரத்தில் வரும் ஜூலை 5ம்தேதி முதல் குரு கடகத்தில் இருந்து சிம்மராசிக்கு பெயர்ச்சியடைவதால் ஜெயலலிதாவிற்கு சிரமதிசை ஆரம்பமாகிவிட்டது. இதற்கான அறிகுறியாகத்தான் கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது.

பரிகாரத்தால் பலன்
குரு பார்வை படுபவர்களுக்குத்தான் பலன் அதிகம். ஜென்மத்தில் குரு அமர்ந்தால் அது கஷ்டங்களையே தரும் எனவே அதிமுகவினர் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்வதோடு கோவில் கோவிலாக ஏறி இறங்கினால் ஒருவேளை அம்மா தப்பிக்க வாய்ப்பு உள்ளது.

சில நன்மையும் உண்டு
அதேநேரத்தில், குரு பகவான் சிம்ம ராசிக்காரர்களை இராசிக்கு பஞ்சமஸ்தானத்தையும், சப்தமஸ்தானத்தையும், பாக்கியஸ்தானத்தையும் பார்வை செய்வதால், மண்ணை தொட்டாலும் பொன்னாகும் என்கின்றனர் ஜோதிடர்கள். குரு பார்வை கோடி புண்ணியம் என்பார்கள். ஆகவே இதன்படி குரு பகவான் "ஜென்ம குரு"வாக அள்ளிக் கொடுக்க போகிறார். எண்ணுகிற எண்ணங்கள் கைக்கூடும். உடல்நலனில் இருந்த பிணிகள் நீங்கும் என்கின்றனர் சில ஜோதிடர்கள்.

சனியும் சரியில்லை குருவும் சரியில்லையே
அம்மாவுக்கு சனிப்பெயர்ச்சியும் சரியில்லை 16.12.2014 முதல் 19.12.2017 வரை சுகஸ்தானமான 4 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் சிரமகாலம்தான். பதவியில் இருந்தாலும் செயலிழந்த நிலையில்தான் வைத்திருப்பார். அதேபோல ஜென்மகுருவும் வனவாசத்திற்கு நிகரான செயல்பாடுகளை செய்வார் எனவே அதிமுகவினர் அடுத்த பரிகாரத்தை இப்போதிருந்தே ஆரம்பித்தால் நல்லது.
-
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications