For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

4 ஆண்டு தண்டனை தமிழ்நாட்டுக்கா அல்லது சசிகலாவுக்கா?.. குருமூர்த்தி குசும்பு!

4 ஆண்டு தண்டனை கிடைக்கப் போவது சசிகலாவுக்கா அல்லது தமிழ்நாட்டுக்கா என்று துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கேட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பின் மூலம் நான்கு ஆண்டன கிடைக்கப் போவது யாருக்கு.. சசிகலாவுக்கா அல்லது தமிழ்நாட்டுக்காக என்று கேட்டு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஒரு டிவீட் போட்டுள்ளார்.

வாட்ஸாப்பை மேற்கோள் காட்டி இந்த ஜோக்கை அவர் போட்டுள்ளார். இதை பலரும் ரீடிவீட் செய்து வருகின்றனர். அந்த டிவீட்டில், வாட்ஸாப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது. நான்கு ஆண்டு தண்டனை சசிகலாவுக்காக அல்லது தமிழ்நாட்டுக்காக என்று அது கேட்கிறது. இரண்டில் ஒன்றுதான் நடக்கும், உண்மையில் என்று கூறியுள்ளார் அவர்.

Gurumurthy's Tweet on DA case verdict

4 ஆண்டு என்று இவர் குறிப்பிடுவது சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோருக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்ததைத்தான். அதேபோல தமிழகத்திலும் இன்னும் 4 ஆண்டு கால ஆட்சி பாக்கி உள்ளது என்பதையும் சேர்த்து அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை வைத்து சமூக வலைதளங்களில் படு தீவிரமான விவாதங்கள் சூடு பிடித்துள்ளன. பலரும் வழக்கின் தீர்ப்பை பெரும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக போஸ்ட் போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Auditor and Thuglak editor Gurumurthy has Tweeted that, A very instructive whatsapp circulating. Whether 4 years conviction is for Sasi or for TN. That's the choice. Really.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X