தமிழக அரசை ஆட்டம் காண வைத்த மாதவ ராவ்.. 10 மணி நேரம் நடந்த சிபிஐ விசாரணை.. யார் இவர்?
குட்கா ஊழல் பிரச்சனைக்கு மிக முக்கியமாக காரணமாக மாதவராவ் பார்க்கப்படுகிறார்.
சென்னை: குட்கா ஊழல் பிரச்சனைக்கு மிக முக்கியமாக காரணமாக மாதவ ராவ் பார்க்கப்படுகிறார்.
குட்கா நிறுவனம் ஒன்றின் துணை தலைவர் மற்றும் பங்குதாரரான இவர், தமிழக அரசு அதிகாரிகள் அமைச்சர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர். தற்போது இவர் உட்பட 6 பேர் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முதல் நாள் தமிழக அரசை சிபிஐ ரெய்டு மொத்தமாக ஆட்டிப்படைத்து . மொத்தம் 35 இடங்களில் சோதனை நடந்தது.அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, உள்ளிட்ட புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடந்தது.

அந்த டைரி
இந்த குட்கா ஊழலில் உண்மைகள் வெளியே வர காரணமாக இருந்தது, மாதவ ராவ் தான். இவரின் குட்கா கிடங்கில் 2016 ஜூலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது மூட்டை மூட்டையாக குட்கா பொட்டலங்கள் கிடைத்தது. இதுதான் குட்கா ஊழலில் பெரிய திருப்பமாக அமைந்தது. அப்போதே வருமான வரித்துறையினர் 8 மணி நேரம் மாதவ ராவிடம் விசாரணை நடத்தினர்.

பல பெயர்கள் இருந்தது
அப்போது அவர் பல பெயர்களை விசாரணை அதிகாரிகளிடம் குறிப்பிட்டார். அதன் அடிப்படையில்தான் அப்போது விஜயபாஸ்கரிடம் விசாரணை செய்யப்பட்டது. அதன்பின் வரிசையாக விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்களிடம் சோதனை செய்யப்பட்டு நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இப்படி இந்த சோதனைக்கு அடிப்படையாக இருந்ததே மாதவ ராவ்தான்.

சிபிஐ நடத்திய விசாரணை
அதன்பின் இந்த வழக்கு சிபிஐக்கு மாறியதில் இருந்தே தீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் கடந்த 8 நாட்களுக்கு முன் மாதவ ராவ் சிபிஐ அதிகாரிகள் மூலம் விசாரிக்கப்பட்டார். அப்போது அவர் வீட்டில் இருந்து ஒரு டைரியும், சில ஆவணங்களும் கிடைத்தது. அதை வைத்துதான் நேற்று முதல் நாள் 35 இடங்களில் சிபிஐ அதிரடிட் ரெய்டு நடத்தியது.

பெயர்களை உளறினார்
இந்த விசாரணை 10 மணி நேரம் நடந்து இருக்கிறது. இதில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது. டிஜிபி, முன்னாள் டிஜிபி, விஜயபாஸ்கர் ஆகியோருக்கு இதில் என்ன தொடர்பு என்றெல்லாம் அவர் இந்த விசாரணையில் தெரிவித்து இருக்கிறார். கிட்டத்தட்ட அப்ரூவர் ஆவதற்கு நிகராக பல தகவல்களை இவர் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது.

யார் இவர்
எம்டிஎம் என்ற குட்கா நிறுவனத்தின் பிரதான உரிமையாளர்தான் மாதவ ராவ். இவருக்கு சொந்தமாக சென்னையில் நிறைய கிடங்குகள் உள்ளது. இந்த குட்கா கிடங்குகள்தான் இந்த சோதனைக்கு பிள்ளையார் சுழி போட்டது. முதல் சோதனை சென்னை கிடங்கில் நடந்த போது , அதற்குள் மாதவ ராவ் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications