எச்சு ராஜா ஒரு பைத்தியக்காரர்.. அறிவுடையவர்கள் அப்படி பேசமாட்டார்கள்.. கடுமையாக விளாசிய குஷ்பு!
சென்னை: பாஜக தேசிய செயலாளரான எச் ராஜாவை நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு சரமாரியாக விளாசியிருக்கிறார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. முதலில் வடகிழக்கு மாநிலமான அசாமில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவி உள்ளது.
இந்த போராட்டங்களில் மாணவர்களும் ஈடுபட்டுள்ளதால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிக்கட்சிகளும் அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காரசார விவாதம்
திரை பிரபலங்கள் பலரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களும் காரசார விவாதங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பொய் பிரச்சாரம்
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்ற வாதங்கள் அனைத்தும் அரசியல் காரணத்திற்காக பரப்பப்படும் பொய் பிரச்சாரம் என்று கூறியிருந்தார்.

கடும் விமர்சனம்
தனது டிவிட்டர் பக்கத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் எச் ராஜா. இந்நிலையில் எச் ராஜாவின் கருத்து குறித்து நடிகை குஷ்பு கடுமையாக விமர்சித்துள்ளார்.
|
நல்ல அறிவுள்ளவர்கள்
இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, எச்சு ராஜாவுக்கு தீவிர பித்துபிடித்துவிட்டது. நல்ல அறிவுள்ள யாரும் அவர் பேசுவது போன்று பேசமாட்டார்கள். ப்ளீஸ் பாஜகவில் இருந்து யாராவது அவருக்கு புகலிடம் கொடுக்க முடியுமா என கேட்டுள்ளார்.
|
உங்களுக்குதான் மனவியாதி
குஷ்புவின் இந்த கருத்துக்கு பாஜகவை சேர்ந்த பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பலரும் உங்களுக்குதான் மனவியாதி உள்ளது என்று சாடியிருக்கின்றனர்.
-
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications