பெரியார் சிலை விவகாரம்: அட்மின் அனுமதி இல்லாமல் பதிவிட்டுவிட்டார்.. வருத்தம் தெரிவித்தார் எச் ராஜா!
பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக எச் ராஜா தனது முகநூல் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக எச் ராஜா தனது முகநூல் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்படும் வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்த பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, இதுபோல் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை உடைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
எச் ராஜாவின் இந்த பதிவு தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து எச் ராஜாவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

போராட்டம்
எச் ராஜாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. அவரது கொடும்பாவியும் பல இடங்களில் எரிக்கப்பட்டது. பல்வேறு அமைப்புகள் எச் ராஜாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அட்மின் செய்த தவறு
இந்நிலையில் எச் ராஜா பெரியார் சிலை குறித்த தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் Admin என் அனுமதி இன்றி பதித்துள்ளார்.

புண்படுத்தும் நோக்கமில்லை
எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன்.
கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை.

நமக்கு ஏற்புடையதல்ல
எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப் படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல.

தேவர் காட்டிய வழியில்
ஆகவே ஆக்கபூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இணைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது. இவ்வாறு எச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications