அந்த வீடியோவுல எச் ராஜா பேசின இந்த பாயிண்டை கவனிச்சீங்களா?
Recommended Video

சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது போலீஸாருடன் சண்டையிட்ட வீடியோவில் இனிமே அண்ணா வேண்டாம், பெரியார் வேண்டாம் மோடி மட்டும் போதும் என்று கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது தேவாலயம் அருகில் மேடை அமைக்க போலீஸார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். இதனால் போலீஸாருடன் எச் ராஜா வாக்குவாதம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.
அந்த வீடியோவில் எச் ராஜா பேசுகையில் நான் எப்படி கீழே நின்னு பேசுறது. எனக்கு ஸ்டேஜ் போட வேண்டும். ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சாமியானா போட்டால் தடுக்கிறீர்கள். ஹைகோர்ட்டாவது மண்ணாங்கட்டியாவது. நீங்கள் போய் புழல் ஜெயில பாருங்க, டிஜிபி வீட்டு ரெய்டை பாருங்க.

கைக்கூலி
தமிழ்நாடு போலீஸ் அத்தனையும் கரப்ட். போலீஸ் யூனிபார்ம் போடவே தகுதியில்லாதவர்கள். என்னா அக்கிரமமா இருக்கு தமிழ்நாட்டுல. எல்லா முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு போலீஸார் கைக்கூலியாக உள்ளனர்.

மோடி சர்கார்
இந்துக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். மோடி சர்கார் நடக்குது. ஆனால் இங்கு கேடி சர்கார்ல நடக்குது. சென்டர்ல மோடி இருக்கும்போதே இவ்ளோ பன்னுவீங்களா நீங்கள். அந்த இத்தாலி சோனியா மட்டும் மத்தியில் இருந்தால் எங்கள் இந்துக்களை கொன்னுடுவீங்களே.

ஈவெரா வேண்டாம்
இந்துக்கள் இந்த நாட்டின் அனாதையா , அடிமையா, ரெண்டாம் தர குடிமகனா, எவ்வளவு மோசம். இந்த நாட்டின் பிரதமர் கேடி அல்ல மோடி. இனிமே இந்த கழகங்கள் வேண்டாம், ஈவெரா வேண்டாம், அண்ணா வேண்டாம், மோடி போதும், பாரத பிரதமர் மோடி. அந்நிய மதத்துகிட்ட நான் கை ஏந்த மாட்டேன்.

ஆவேசம்
ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு போய்விடுவேன். ரோஷமுள்ளவன் நான் , உப்பு போட்டு சோறு திங்கறேன்.உங்களுடைய ஒரே நோக்கம், ஆல் இந்தியா செகரட்டிரிய எதிர்க்கனும்ங்கிறது. அதான் எதிர்க்கிறீங்க. நான் உங்கள் நண்பனா பார்க்கிறேன். நீங்கள் என்னை எதிரியா பார்க்கறீங்க. ராஜாவை இழிவா நெனச்சுட்டீங்க என்று ஆவேசமாக பேசினார் எச் ராஜா.
{document1}












Click it and Unblock the Notifications