For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் என்ன நடந்தது.. எச்.ராஜா இன்று ஆய்வு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று எச்.ராஜா ஆய்வு செய்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    குரங்கு கையில் பூமாலை..யாரை சொன்னார் ஹெச்.ராஜா?- வீடியோ

    மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ பிடித்ததை இந்து மதத்தை பின்பற்றும் மக்கள் அபசகுமான நினைத்து வருகிறார்கள். சிலர் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறிவருகிறார்கள்.

    முக்கியமாக தமிழக பாஜக கட்சி இதுகுறித்து வருத்தமாக பேசி இருந்தது. அதேபோல் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இதுகுறித்து கோபமாக பேசி இருந்தார்.

    இதற்காக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ கூட வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் கோவிலை பார்வையிட்டு இருக்கிறார்.

    கோவிலில் தீ

    கோவிலில் தீ

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து நிகழ்ந்தது. இதில் வீரவசந்தராயர் மண்டபம் அதிகமாக சேதம் அடைந்தது. இதில் நூற்றுக்கணக்காக புறாக்களும் மடிந்து போனது. இந்த சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விசாரணை வேண்டும்

    இதுகுறித்து விசாரணை நடந்த வேண்டும் என்று எச் ராரா கோரிக்கை வைத்து இருந்தார். அவர் தனது டிவிட்டரில் ''மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரம் கால் மண்டபம் மேற்கூரை பாதிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வருகின்றன. இது விபத்தா சதியா என கண்டறிய பாரபட்சமற்ற விசாரணை தேவை.'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

    அறநிலையத்துறை

    மேலும் தமிழ்நாடு அறநிலையத்துறை மீதும் குற்றச்சாட்டு வைத்தார். அதில் ''மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு வாயில் பகுதியில் கோயில் கட்டிடம் 7000 சதுர அடி பரப்பளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மீதி பகுதிகள் பற்றி ஆய்வு தேவை. இந்து அறமற்ற துறையின் அவலத்திற்கு எடுத்துக்காட்டு'' என்றார்.

    ஆய்வு செய்தார்

    ஆய்வு செய்தார்

    தற்போது இதுகுறித்து ஆய்வு செய்ய அவரே களம் இறங்கி இருக்கிறார். இதற்காக இன்று அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செய்து உள்ளார். கோவிலில் எதற்காக தீ பிடித்தது என்று அவர் ஆய்வு செய்தார்.

    English summary
    H Raja visits the Madurai Meenatchi Amman Temple. He will check fire damage in the temple and reason behind the fire accident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X