கள்ளக் காதலால் விபரீதம்: மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொலை செய்த தாய், கள்ளக்காதலன் உள்பட 5 பேர் கைது
மாற்றுத்திறனாளி குழந்தைகளை பெற்ற தாய் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே கள்ளக் காதலுக்கு இடையூராக இருந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொன்ற தாய், கள்ளக் காதலன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை அருகே எல்லையூரைச் சேர்ந்தவர் நாகப்பா, கவுரம்மா தம்பதியரின் மகள் வெங்கடலட்சுமி (35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய தாய்மாமன் சீனிவாசன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களது குழந்தைகள் மகள் மஞ்சு(15), மகன் (முத்தப்பா(13). இந்த இரண்டு குழுந்தைகளும் மாற்றுத்திறனாளிகள். குடும்ப பிரச்சனை காரணமாக வெங்கடலட்சுமி கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சுரேஷ் (34) என்பவருடன் வெங்கடலட்சுமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். கள்ளக்காதலுக்கு குழந்தைகள் இடையூறாக இருந்ததால், அவர்களை பெங்களூரில் உள்ள காப்பகத்தில் சேர்க்க சுரேஷும், வெங்கடலட்சுமியும் முடிவு செய்தனர். 6 மாதத்துக்கு முன், இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் பெங்களூருக்கு அழைத்து சென்று காப்பகத்தில் சேர்த்தனர்.
இதனிடையே வெங்கடலட்சுமியின் பெற்றோர், தங்களுடைய சொத்துக்களை மகள் மற்றும் பேரன், பேத்திகளுக்கு என 3 பங்காக பிரித்து உயில் எழுதியிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடலட்சுமி கள்ளக்காதனுடன் சேர்ந்து மாற்றுத்திறனாளி குழுந்தைகளை கொல்ல திட்டம் தீட்டினார். இதற்காக, பெங்களூர் காப்பகத்தில் இருந்து குழந்தைகளை எல்லையூருக்கு அழைத்து வந்து கொலை செய்துள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் நவீன்குமார் என்பவர் குழந்தைகளை கொன்றாத ஒப்புக்கொண்டார். மேலும் சுரேஷ், தாய் வெங்கடலட்சுமி, சுரேஷின் தம்பி கோபால் (24), கோபாலின் மனைவி சாந்தி (23) ஆகிய 4 பேரும் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அதன்பின் 5 பேரையும் நேற்றிரவு மத்திகிரி போலீசார் கைது செய்தனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications