கள்ளக்குறிச்சி பள்ளியில் கொள்ளையடித்த கும்பல்- போலீஸ் கைதுக்கு பயந்து "17 ஜோடி தோடுகள்" ஒப்படைப்பு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கனியாமூரில் பள்ளியில் கொள்ளையடித்தவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தண்டோரா போட்டதால், கொள்ளையடித்த பொருட்களை இரவில் சாலையோரம் வைத்துச் சென்றுள்ளனர். மேலும், 17 ஜோடி தங்க தோடுகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர், போலீசாரிடம் அதனை ஒப்படைத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் +2ம் வகுப்பு படித்து வந்த மாணவி, கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர், உறவினர்கள் குற்றச்சாட்டியதோடு, மரணத்திற்கு நீதி கேட்டு, கடந்த 17ம் தேதி பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கியதோடு, பள்ளி வளாகத்திற்குள் புகுந்து அங்கிருந்த வாகனங்கள், பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கினர். பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. போராட்டம் தீவிரமடைந்ததால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதனையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த கலவரத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திகொண்ட ஒரு கும்பல், பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த மேஜை, நாற்காலிகள், வகுப்பறைகளில் இருந்த டேபிள், பென்ச், சமையல் பாத்திரங்கள், ஏசி இயந்திரங்கள், கணினிகள் என கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் தூக்கி சென்றனர்.
இந்நிலையில், 'வாட்ஸ் ஆப்' வீடியோ, போட்டோ, மொபைல் டவர் சிக்னல் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி அருகே உள்ள சுற்று வட்டார கிராமங்களில் கலவரத்தைப் பயன்படுத்தி எடுத்துச் சென்ற பள்ளிக்கு சொந்தமான பொருட்களை மீண்டும் ஒப்படைக்குமாறும், இல்லையெனில் சோதனை செய்து போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தச்சூர் உள்ளிட்ட கிராமங்களில் 'தண்டோரா' போடப்பட்டது. சின்னசேலம் கலவரத்தின் போது தனியார் பள்ளியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்கள் அனைத்தையும் திரும்ப வழங்கிடுமாறு கிராமம், கிராமமாக சென்று தண்டோரா மூலம் வருவாய் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் அச்சமடைந்த பொருட்களை சூறையாடிய கும்பல், கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் சூறையாடப்பட்ட டேபிள், சேர், பெஞ்சுகள் உள்ளிட்ட பொருட்களை, யாருக்கும் தெரியாமல் இரவில் சாலையோரம் வைத்துச் சென்றுள்ளனர். மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள நிர்வாகியின் வீட்டில் புகுந்து 17 ஜோடி தங்க தோடுகளை திருடிச் சென்ற நபர் ஒருவர் தாமாக முன்வந்து சின்னசேலம் போலீசாரிடம் அதனை ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.

அதேபோல், இந்த கலவரத்தின் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நிறுத்தி வைத்திருந்த பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டது. ஒரு சிலர், பள்ளி பேருந்துகளின் சக்கரத்தை கழற்றி எடுத்துச் சென்றுள்ளனர். கண்ணாடி உடைத்து சேதப்படுத்தப்பட்டு எரிக்கப்படாத பேருந்துகள் கொண்டு வந்து பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டோராவிற்கு அஞ்சியாவது, தனியார் பள்ளியில் இருந்து, எடுத்து செல்லப்பட்ட பொருட்களை எல்லாம் திரும்ப பெற்றுவிடலாம் என வருவாய் துறை அதிகாரிகள் நம்புகிறார்கள். அவர்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா? நிறைவேறாதா? பொறுத்திருந்து பார்ப்போம்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications