குடும்ப கட்டுப்பாட்டால் ஆபத்து.. அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.. மணமக்களுக்கு ஸ்டாலின் அட்வைஸ்
தஞ்சாவூர்: மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறு வரையறை செய்வதால், மணமக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் இன்று திருமண விழா ஒன்றில் பேசியுள்ளார்.
தஞ்சாவூரில் இன்று திமுக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை சந்திரசேகர் இல்ல திருமண விழாவில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அதைத்தொடர்ந்து இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "இது சீர்திருத்த திருமணமாக நடைபெற்றுள்ளது. 1967-க்கு முன்பாக சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை நாம் பெறவில்லை. ஆனால், அண்ணா முதல்வராக பதவியேற்ற பின்பு 1967 ஆம் ஆண்டு சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார். நாட்டிலேயே முதன் முறையாக சுயமரியாதை திருமணங்களை அங்கீகரித்து தமிழகம் தான் சட்டமாக்கியது.
உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் இந்த விழாவில் தமிழில் பேசியதை நான் ஆச்சரியத்தோடு பார்த்தேன். உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழகத்திற்கு வரும்போது எல்லாம், உச்சநீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
கலைஞர் முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் இதுதொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றினார். உச்சநீதிமன்றத்தில் வெளியாகும் தீர்ப்பு தமிழில் வெளியாகிறது. அதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம், பெருமைப்படுகிறோம். அதேவேளையில், உச்சநீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர நீங்கள் எங்களோடு துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழுக்கு செம்மொழி என்ற பெருமையை தேடி தந்தவர் கருணாநிதி. பெற்றோர் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும். மணமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள். அதேபோல, அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வது நல்லது.
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று தற்போது யாரும் வாழ்த்துவது இல்லை. இதற்கு காரணம், தவறாக புரிந்து கொண்டு, 16 குழந்தைகளை பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக சொல்வதற்கு தயங்குகின்றனர். குழந்தைகள் இன்று அதிகம் பெற்று கொள்வதற்கான நிலை உருவாகி இருக்கிறது.
ஏனென்றால் மக்கள் தொகை அடிப்படையில் தான் நாடாளுமன்ற தொகுதிகளை பிரித்து கொடுக்கிறார்கள். குடும்ப கட்டுப்பாடை சரியாக பின்பற்றியதால் தமிழகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கான நாடாளுமன்ற எண்ணிக்கை குறையும் சூழ்நிலை வந்திருக்கிறது. அதனால் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications