மருத்துவ கவுன்சில் நிர்வாகியாக மாஜி நீதிபதி வெங்கட்ராமன் நியமனம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மருத்துவ கவுன்சில் நிர்வாகியாக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமனை நியமனம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் ஜூன் 19ல் முடிந்தது.
மருத்துவ கவுன்சிலுக்கு மாஜி உயர் நீதிமன்ற நீதிபதியை நிர்வாகியாக நியமிக்கக் கோரி, கவுன்சிலின் பொறுப்பு தலைவராக உள்ள சடகோபன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்த ஜூன் 20ம் தேதி நீதிபதி எம்.துரைசாமி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன், நிர்வாகக் குழுவிற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. கவுன்சில் உறுப்பினர்கள் மத்தியில் ஒத்துழைப்பு இல்லாததால், அமைதியாக தேர்தல் நடத்த முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட குழு அமையும் வரை, மருத்துவ கவுன்சிலுக்கு நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று வாதித்தட்டார். பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் நீதிமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமனை மருத்துவ கவுன்சில் நிர்வாகியாக நீதிமன்றம் நியமித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், கவுன்சிலின் தேர்தலை நடத்தும் அதிகாரியாகவும் வெங்கட்ராமன் செயல்படுவார் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications