காரைக்கால் வினோதினி மீது ஆசிட் வீசிய சுரேஷ்: ஆயுள் தண்டனையை உறுதி செய்த ஹைகோர்ட்
சென்னை : காரைக்கால் ஐடி ஊழியர் வினோதினியை ஆசிட் வீசிக் கொன்ற வழக்கில் கொலையாளி சுரேஷ்குமாருக்கு காரைக்கால் நீதிமன்றம் அளித்த ஆயுள்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
புதுவை யூனியன் பிரதேசம் காரைக்கால் ஜெயபாலின் மகள் வினோதினி. இவர் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி இருந்து சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரை ஒருதலையாக காதலித்தான் கட்டிடத் தொழிலாளி சுரேஷ். அவனது காதலை வினோதினி ஏற்கவில்லை. கடந்த 2012ம் ஆண்டு தீபாவளிக்கு வினோதினி காரைக்கால் போது பேருந்து நிலையத்தில் வினோதியின் முகத்தை ஆசிட்டை வீசினான்.

இதில் முகம் முழுவதும் வெந்து கண் பார்வை பறிபோன நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய வினோதினி, 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். இந்த வழக்கில் சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆசிட் வீச்சில் வினோதினி பலியான வழக்கில் குற்றவாளி சுரேசுக்கு 2013ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. காயப்படுத்துதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை செய்ய முயலுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும்,வினோதினியின் தந்தை ஜெயபால் மீதும் ஆசிட் பட்டு காயம் ஏற்பட்டது குறித்த வழக்கில், சுரேஷுக்கு மேலும் நான்கரை ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மகளின் மரணத்தால் மனமுடைந்த வினோதினியின் தாயாரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இரு உயிர்கள் பலியாக காரணமான சுரேஷ் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சுரேஷ் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தான்.
காரைக்கால் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர் குற்றவாளி சுரேஷ் குமாருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications