காணாமல் போன குழந்தைகள் வழக்கு: 4 மாதத்துக்குள் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: காணாமல் போன குழந்தைகள் தொடர்பான வழக்கில் 4 மாதத்துக்குள் இழப்பீடு தொகை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
காணாமல் போன குழந்தைகள் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று காலை நீதிபதி நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் காணாமல் போன 47 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு 4 மாதத்துக்குள் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டு வரை காணமாமல் போன குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு லட்சமும், 5 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை காணமாமல் போன குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரூபாய் 2 லட்சமும்,
7 ஆண்டுகளுக்கு மேலாக காணாமல் போன குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரூபாய் 3 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும்.
அந்தந்த மாவட்ட காவல்துறை எஸ்.பி. இதனை நேரில் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை அறிக்கையை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் செப்டம்பர் 20-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அன்றைய தினம் இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications