கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நித்யானந்தாவுக்கு விலக்கு
சென்னை: சாமியார் நித்யானந்தாவுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி நேரில் ஆஜராக விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2011-ம் ஆண்டு நித்தியானந்தா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மனைவி வேற்று மதத்தை சார்ந்தவர். தனது மனைவியை இந்து மதத்தை சேர்ந்தவராக தேர்ந்தெடுக்க முடியவில்லை. இந்த நிலையில் அவர் எப்படி இந்து மதத்தை காப்பாற்றுவார் என பேசியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி தலைர் அர்ஜூன் சம்பத் கோவை நீதிமன்றத்தில் நித்தியானந்தா மீது ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு கடந்த கடந்த 2011ஆம் ஆண்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் செப்டம்பர் 3-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு கடந்த மாதம் 28-ஆம் தேதி கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவதூறு வழக்கில் நேரில் ஆஜாரவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும், என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என நித்யானந்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.பி.கே.வாசுகி முன்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஜி.பாலா, டெய்சி ஆஜராகி, மனுதாரர் எந்தத் தவறும் செய்யவில்லை. அதற்கான எந்த ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை ஆதாரமாக எடுக்க முடியாது என வாதாடினர்.
மனுவை விசாரித்த நீதிபதி, கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நித்யானந்தாவுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications