சபாநாயகர் தனபால் மீது சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு! ஹைகோர்ட் நோட்டீஸ்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே உறுப்பினர்களாக அங்கம் வகிக்கக் கூடிய ராசிபுரம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கம் 1991 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இந்த கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு தவணை முறையில் வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்ய, மாநில வீட்டு வசதி சங்கப் பதிவாளர் அனுமதியுடன் 1996 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் சுமார் 7.85 ஏக்கர் நிலம் சங்கத்தின் பெயரில் ராசிபுரத்தில் வாங்கப்பட்டது.
இந்த சங்கத்தில், சபாநாயகர் தனபால் துணையுடன், அ.தி.மு.க. பிரமுகர்கள் 11 பேர் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 11 பேரில் யாரும் அரசு ஊழியரோ அல்லது ஆசிரியரோ அல்ல என கூறப்படுகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட 9 உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக சபாநாயகர் தனபால் உள்ளிட்ட 12 பேர் மீது நடவடிக்கை கோரியும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்யக் கோரியும் மனுத்தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 28ந் தேதி சங்கத்திற்கான இடத்தை வேறு யார் பெயருக்கும் மாற்றம் செய்யக் கூடாது என்று இடைக்கால தடை உத்தரவிட்டது. மேலும், சபாநாயகர் தனபால் உள்ளிட்ட 12 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications