லிங்கா நஷ்டம், உண்ணாவிரதம்... விளக்கம் அளிக்க காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
சென்னை: லிங்கா பட நஷ்டத்தை ஈடுசெய்ய வலியுறுத்தி, விநியோகஸ்தர்கள் மேற்கொள்ளவிருக்கும் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து நாளைக்குள் விளக்கம் அளிக்கும்படி, மாநகர போலீஸ் கமிஷனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லிங்கா படத்தை திருச்சி - தஞ்சைப் பகுதியில் வெளியிட்ட மெரீனா பிக்சர்ஸ் நிறுவனம், இந்தப் படத்தால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும், அந்த நஷ்டத்தை ஈடு செய்யும்படி தாங்கள் விடுத்த கோரிக்கையை யாரும் கவனிக்காததால் சென்னையில் வள்ளுவர் கோட்டம் அல்லது அரசு விருந்தினர் மாளிகை அருகே ஜனவரி 10 ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தது.

ஆனால் இதற்கு சென்னை போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி டி.எஸ். சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி வாதிட்டார். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் இதுபற்றி விளக்கம் பெற இரண்டு நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்றார் .
அதற்கு நீதிபதி மறுத்து விட்டார். "மனுதாரர் உண்ணாவிரதம் இருக்கத்தான் அனுமதி கேட்டுள்ளார். அதற்கான பதிலை நாளைக்குள் தெரிவிக்கவும்," என்று உத்தரவிட்டார்.
-
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
100 நாள் ஆச்சு.. இன்று மாலைக்குள் ஆகாஷ் உடலை வாங்குங்க.. பெற்றோருக்கு கெடு விதித்த ஐகோர்ட்! -
விவாகரத்து வழக்குகளில் பெயர்களை வெளியிடக் கூடாது - உயர்நீதிமன்ற கிளை போட்ட உத்தரவு! - -
3 மாதங்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..நீதிமன்ற உத்தரவால் 102வது நாளில் தகனம்! உறவினர்கள் அஞ்சலி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications