தமிழக சட்டம்-ஒழுங்கு: டிராபிக் ராமசாமி கேஸ்- உள்துறை செயலாளருக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்!
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன என்று ஒருவாரத்திற்கு தெரிவிக்குமாறு டி.ஜி.பி மற்றும் உள்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு சிறைதண்டனை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அதிமுகவினர் மாநிலம் முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
இந்த நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையமும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளனர்.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இந்த மனு விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் வைத்தியநாதன், மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக டி.ஜி.பி. மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications