For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடிவாரண்ட்- போலீசாருக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குட் எதிரான பிடிவாரண் தொடர்பான வழக்கில் சென்னை போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா சென்னையில் தங்கியிருந்த போது அவரது ஆதரவாளர்களால் 1986-ம் ஆண்டு திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

HC orders notice on Lankan minister's plea to recall NBW

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் 1990ஆம் ஆண்டு டக்ளஸ் இலங்கைக்குப் போய்விட்டார். இதனால் 1994ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்ட குற்றவாளியாக பிரகடனப்படுத்தப்பட்டார்.

சென்னை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து டக்ளஸ் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அண்மையில் பிடிவாரண்ட் தொடர்பான வழக்கில் தமது மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து டக்ளஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு மீது 2 வாரத்தில் பதிலளிக்குமாறு சென்னை போலீசாருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

English summary
Madras High Court today ordered issuance of notice to authorities on a criminal revision petition by Sri Lankan Minister Douglas Devananda to recall a non-bailable warrant issued by a lower court in a shootout case registered in 1986.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X