18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு: தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
Recommended Video

சென்னை: தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யபட்டது தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என கோரி ஆளுநரிடம் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர். இதையடுத்து 18 எம்.எல்.ஏக்களையும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து அறிவித்தார்.

இதற்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர், 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த கோரி பொதுநலன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்திருக்கிறது. இதனிடையே ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அப்போது, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை முதலில் தெரிவிக்க வேண்டும் என தேவராஜன், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியுடன் தகராறு செய்தார்.
இதையடுத்து மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் தேவராஜனை நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றினர். இந்த நிலையில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று தெரிவித்துள்ளார். முன்னதாக ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த தீர்ப்பை தங்கதமிழ்ச் செல்வன் உள்நோக்கத்துடன் விமர்சித்ததாகவும் இந்திரா பானர்ஜியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மனசாட்சிப்படியே தீர்ப்பளித்தோம் எனவும் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications