ஜாமீனுக்காக சீமை கருவேல மரங்களை வெட்டச் சொல்வது சட்ட விரோதம்- ஹைகோர்ட் 'சுளீர்'
ஜாமீன் வழங்க கருவேல மரங்களை வெட்ட நிபந்தனை விதிப்பது சட்ட விரோதம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் அறிவுறுத்தியுள்ளார்
சென்னை: ஜாமீன் வழங்க கருவேல மரங்களை வெட்ட நிபந்தனை விதிப்பதை தவிர்க்க வேண்டும் என கீழ்நீதிமன்றகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் அறிவுறுத்தியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிபதிகள் கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொலை வழக்கில் ஜாமீன் கோரி ஞானம் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் வழக்கில் ஒருவர் தண்டனை பெறும் வரை குற்றம்சாட்டப்பட்டவர் மட்டுமே என நீதிபதி தெரிவித்துள்ளார். நீதிபதிகள் சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும் எனவும் நீதிபதி தேவதாஸ் தெரிவித்துள்ளார்.

ஜாமீன் கேட்பவர்களை கருவேல மரங்களை வெட்டச் செல்வது மனித உரிமை மீறல் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். ஜாமீன் கேட்பவர்களை கருவேல மரங்களை வெட்டச் செல்வது சட்ட விரோதம் என்றும் நீதிபதி தேவதாஸ் கூறியுள்ளார்.
வழக்கு விசாரணை நடைபெறும் போதே தண்டனை அளிக்கும் விதமாக மரங்களை வெட்ச்சொல்வது ஏன் என்றும் நீதிபதி தேவதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் ஜாமீனில் வெளிவருவோர் சீமைக்கருவேல மரங்கள் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 20 நாட்களுக்குள் 100 சீமைக்கருவைகளை அகற்ற அரியலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல கோவில்பட்டி அருகிலுள்ள தீ்த்தாம்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவர் திருட்டு வழக்கில் கைதானார். ஜாமீன் கேட்டு அவர் இன்று கோவில்பட்டி நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதி வீரணன், முருகன் ஊரிலுள்ள 25 சீமைக்கருவேல மரங்களை வேறோடு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியுள்ளார்.
ஊடகங்களில் இந்த செய்தி வெளியானது. கீழ் நீதிமன்ற நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications