வாட்டி வதைக்கும் அனல் காற்று.. சுட்டெரிக்கும் வெப்பம்- தமிழகத்தின் 9 நகரங்களில் சதமடித்த கோடை வெயில்
சென்னை: தமிழகத்தில் மார்ச் மாதத்திலேயே தொடங்கியுள்ள வெயில் வாட்டி வதைக்க துவங்கியுள்ளது. நேற்றைய பொழுதில் தமிழகம் முழுவதும் பரவலாக பல இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
கோடை வெயில் வழக்கமாக ஏப்ரல் மாதம்தான் உக்கிரம் அடையத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு இந்த மாத தொடக்கத்திலேயே வெயில் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று 9 நகரங்களில் வெயில் சராசரியாக 100 டிகிரியை கடந்தது. ஏப்ரல், மே மாதங்களில் வெயில் 110 டிகிரியை எட்டி விடக்கூடும் என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
கொளுத்தும் வெயில்:
கோடைக்காலத்தின் ஆரம்பத்திலேயே தமிழகத்தில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. மதுரை, சேலம், திருச்சி, பாளையங்கோட்டை உள்ளிட்ட நகரங்களில் வெப்பத்தின் அளவு தொடர்ந்து 100 டிகிரிக்கும் அதிகமாகவே பதிவாகிறது.
அனல் காற்றில் தகிக்கும் சென்னை:
சென்னையைப் பொருத்தவரை பகல் நேரங்களில் வெயிலுடன், அனல் காற்றின் தாக்கமும் ஏற்படுகிறது. இந்நிலையில், நேற்று திருப்பத்தூரில் அதிகபட்சமாக 104 டிகிரியும், பாளையங்கோட்டை, சேலம், மதுரை உள்ளிட்ட நகரங்களில் 102 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
வெப்பப் பிடியில் ஆந்திரா:
தமிழ்நாட்டை விட ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெயில் தாக்கம் மிக கொடூரமாக மாறியுள்ளது. மதிய வேளைகளில் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று மட்டும் கடுமையான வெயில் மற்றும் அனல் காற்றுக்கு 7 பேர் பலியானார்கள்.
வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):
திருப்பத்தூர் 104
திருச்சி 102
சேலம் 102
பாளையங்கோட்டை 102
மதுரை 102
தருமபுரி 102
வேலூர் 100
தஞ்சாவூர் 100
கோவை 99
திருத்தணி 99
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications