சேலையில் வந்த நயன்தாரா.. பயங்கரமாக கூடி தமிழகத்தின் பெயரைக் கெடுத்த சேலத்து ரசிகர்கள்!
சேலம்: சேலத்தில் பிரபல துணிக்கடை ஒன்றின் திறப்புவிழாவில் பங்கேற்ற நடிகை நயன்தாரா வந்திருந்ததால், ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே பிரபல துணிக்கடை ஒன்றின் 21-வது கிளையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்க நடிகை நயன்தாரா வந்திருந்தார்.
Amazing Reception 😘 Nayanthara- Kalyan Silks🎉🎊 #HappyFans👌👍 pic.twitter.com/Xd4BGhZUM5
— Nayanthara✨ (@NayantharaU) September 26, 2015 தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருக்கும் நயன்தாரா வந்ததால், அவரைப் பார்க்க இளைஞர்கள், ரசிகர்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆயிரக்கணக்கில் திரளாக அங்கு குவிந்தனர்.
இதனால், அங்கு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் செல்லக் கூட வழி விட முடியாத அளவிற்கு 3 மணி நேரம் அந்த இடமே மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது.
கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்மநபர்கள், கல்லூரி மாணவியின் 3 சவரன் தங்க நகையைப் பறித்துச் சென்றனர்.
அலைமோதிய மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார், பொதுமக்கள் மீதும், பத்திரிக்கையாளர்கள் மீதும் தடியடி நடத்தியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த நயன்தாரா, கடையைத் திறந்து வைத்து விட்டு, அருகில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அங்கிருந்து அவர் கிளம்பியதும், அவரைப் பார்க்க அங்கிருந்த மக்கள் கூட்டம் நாற்காலிகளை கீழே தள்ளிவிட்டும், கையில் எடுத்துக் கொண்டும் மேடையின் பின்னால் ஓடினர்.
இவ்வாறு நயன்தாரா வருகையில் காலை முதல் மதியம் வரை சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியே மக்கள் கூட்டத்தில் விழாக்கோலம் பூண்டிருந்தது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications