கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5 நகராட்சிகள், 15 பஞ்சாயத்துக்களுக்கு மின் வினியோகம் திரும்பியது
சென்னை: கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5 நகராட்சிகள், 15 நகர பஞ்சாயத்துகளுக்கு மின்வினியோகத்துக்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பருவமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்யும் வகையில் கரூர், திருச்சி, தஞ்சாவூர், காஞ்சீபுரம், விழுப்புரம், ஈரோடு, கோயம்புத்தூர், தர்மபுரி ஆகிய மின் பகிர்மான வட்டங்களிலிருந்து பணிபுரியும் 2 ஆயிரத்து 350 மின்சார பணியாளர்களால் நிவாரண பணிகள் நடந்து வருகிறது. இதனை துரிதப்படுத்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மேலாண்மை இயக்குநர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு, துரித நடவடிக்கை எடுக்கப்பட்டன.

அதன் அடிப்படையில் 2 ஆயிரம் மின் கம்பங்கள், 64 மின்மாற்றிகள், 226 கி.மீ தூரத்திற்கு மின்வட கம்பிகள் சேதமடைந்துள்ளன. இதில் 1,313 மின்கம்பங்கள், 13 மின்மாற்றிகள் மற்றும் 137 கி.மீ. தூரத்திற்கு மின்வட கம்பிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
5 நகராட்சிகளுக்கும், 15 நகர பஞ்சாயத்துகளுக்கும் மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. 905 கிராமங்களில், 700 கிராமங்களுக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டுவிட்டது. அதனை தொடர்ந்து நேற்று 150 கிராமங்களுக்கு மின் வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 55 கிராமங்களில் மழைநீர் வடிந்தவுடன் மின் வினியோகம் சீரமைக்கப்படும்.
கடந்த 11 ஆம் தேதி அன்று ஒரே நாளில் 161 கிராமங்களுக்கு மின்வினியோகம் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. மொத்தமுள்ள 8 கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்பாதை வழித்தடங்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு முழுவதுமாக மின்விநியோகம் வழங்கப்பட்டுவிட்டது.
இப்பணிகளை நேரில் பார்வையிட்டு அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் கிடைத்திட வேண்டி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மு.சாய்குமார், இயக்குநர் மு.பாண்டி மற்றும் தலைமைப்பொறியாளர் மற்றும் மின் தொடரமைப்பு திட்டங்கள் செந்தில்வேல் ஆகியோர் முகாமிட்டு நிவாரண பணிகளை செய்து வருகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications