சென்னையில் ராம்குமார் பிரேதப் பரிசோதனை.. சொந்த ஊரில் போலீஸ் குவிப்பு #ramkumar
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள ராம்குமாரின் சொந்த ஊரில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். ராம்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனை இன்று நடைபெறும் நிலையில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சாப்ட்வேர் பொறியாளர் சுவாதி கொலைவழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தை சார்ந்த பரமசிவம் என்பவரது மகன் ராம்குமார் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் கடந்த 18ம் தேதி சிறைக்குள்ளேயே மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் மற்றும் சிறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரம் பரபரபப்பானது. தொடர்ந்து பதட்டத்துடன் இருந்து வருகிறது. அவரது உறவினர்கள் ராம்குமாரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி 19ம் தேதி சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் அவரது உடல் இன்று சென்னையில் உடல் கூறு செய்யப்படும் நிலையில் இங்கு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்ப்படாவண்ணம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் தலைமையில் செங்கோட்டை, கணக்கபிள்ளை வலசை, பன்பொழி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications