திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வளவனாற்றில் வெள்ளப்பெருக்கு.. மழை நீர் ஊருக்குள் புகுந்தது
திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வளவனாற்றில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அருகிலுள்ள கிராமங்களில் மழை நீர் புகுந்தது.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. டெல்டா பகுதியான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று பகல் பெய்த பலத்த மழையால் உப்பளங்களில் மழை நீர் புகுந்தது. இதனால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றமாக இருப்பதால் வேதாரண்யம், பூம்புகார்,பழையாறு பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக திருத்துறைப்பூண்டி அருகே மேலமருதூர் மேல சேத்தியில் உள்ள வளவனாற்றில் உடைப்பு ஏற்பட்டு ஆற்று நீர் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்தது. இதனால் மேலமருதூர், வடபாதி, தென்பாதி, பிராந்தியக்கரை, மணக்காடு, கரியாப்பட்டினம், தாணிகோட்டகம், பிச்சகொட்டகம், காரமடை உள்ளிட்ட 10 கிராமங்களுக்குள் மழை நீர் புகுந்தது.
தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறையினர் உடைப்பு ஏற்பட்ட பகுதியை மணல் மூட்டைகள் அடுக்கி அடைக்க முயன்றனர். ஆனால் இரவில் பலத்த மழை பெய்ததால் முழுவதுமாக அடைக்க முடியவில்லை. இன்று காலை மீண்டும் அடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, ஆற்றில் மண்டிக்கிடக்கும் கோரை புற்கள், ஆகாயதாமரை ஆகியவற்றை அகற்றி, ஆற்றை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications