சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை... பெருக்கெடுத்த வெள்ளம்
சென்னையில் மாலை நேரத்தில் திடீரென கனமழை கொட்டி வெள்ளம் பெருக்கெடுத்தது.
சென்னை: சென்னையில் மாலை நேரத்தில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சாலைகளில் தேங்கிய வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
வளிமண்டல கீழடுக்கில் காற்று சுழற்சி நீடிப்பதால் வடதமிழகம் முதல் தென்தமிழகம் வரை அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தென்மேற்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. தென் மாநிலங்களில் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்கிறது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
Northern suburbs of #Chennai like Red Hills getting sharp spell of #Rains. Storms moving west to east so not much chance fit rest of city pic.twitter.com/advGpQqnCn
— Chennairains (@ChennaiRains) August 4, 2017
ப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையில், மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
சென்னையில் கனமழை
@ChennaiRains @chennaiweather @ChennaiConnect Heavy rain at Gemini Flyover area. pic.twitter.com/PfmaZYrrn1
— RajaSekhar (@rajasekharvk) August 4, 2017
காலை முதலே வெயில் கொளுத்தி வந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது போலவே மாலையில் குளிர் காற்று வீசியது திடீரென மழை கொட்டித் தீர்த்தது. மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பெய்த திடீர் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.












Click it and Unblock the Notifications