அப்பப்பப்பா, என்ன மழை என்ன மழை: மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை, கடலூர்
சென்னை: தற்போது மீண்டும் கனமழை பெய்து வருவதால் சென்னை, கடலூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
கடந்த மாதம் 8ம் தேதி முதல் தமிழகத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வந்ததால் சென்னை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாகின. மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தற்போது மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

6 மாவட்டங்கள்
நேற்று இரவில் இருந்து பெய்து வரும் கனமழையால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. அதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடலூர்
கடந்த மாதம் பெய்த மழையால் வெள்ளத்தில் தத்தளித்த கடலூரில் நேற்று இரவில் இருந்து தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது. கடலூரில் பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

படகுகள்
கடலூரில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை தீயணைப்பு படை வீரர்கள் படகுகளில் மீட்டு வருகின்றனர். மாவட்டத்தில் மழைக்கு இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர்.
|
சென்னை
சென்னையில் கேயம்பேடு, வடபழனி, போரூர், குன்றத்தூர், பம்மல், அனகாபுத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மாடம்பாக்கம், செம்பாக்கம், சோழிங்க நல்லூர், வேளச்சேரி, மேடவாக்கம், பெருங்களத்தூர், அடையார், கிண்டி, தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வெள்ளம்
அம்பத்தூர், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. மேலும் அம்பத்தூர் எஸ்டேட், சிட்கோ ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்குள்ளும் நீர் பகுந்துள்ளது. இதனால் பல தொழிற்சாலைகள் இன்று செயல்படவில்லை.
-
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications