விடிய விடிய கனமழை… சென்னை உள்ளிட்ட 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விடிய விடிய பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் நீடித்து வந்த மேல் அடுக்குச் சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியிருப்பதால், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று காலை நேரத்தில் லேசான தூறலுடன் பெய்த மழை மாலை நேரத்தில் இருந்து கனமழையாக மாறியது. விடிய விடிய இந்த மழை நீடித்தது.

மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டிணப்பாக்கம், மெரினா, அடையார் திருவொற்றியூர், பாரிமுனை, , பூந்தமல்லி, கிண்டி உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு முழுவதும் நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதோடு, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழை நீடித்து வருகிறது. இதனையொட்டி மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
48 மணிநேரத்திற்கு கனமழை தொடர வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளதால், முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளில் மாநகராட்சி இறங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications