தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு அதிக கனமழை கொட்டும்: எச்சரிக்கும் ரமணன்
சென்னை: இலங்கை, வடதமிழகத்தை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடிப்பதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் அடுத்தடுத்து உருவாகியதால் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் சென்னை நகர் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான செங்குன்றம், மாதவரம், புழல், கொளத்தூர், ராஜாமங்கலம் வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் பகல் 2 மணி வரை வெயில் அடித்தது. பின்னர் காற்றுடன் பலத்த மழை கொட்டியது. மழை காரணமாக செங்குன்றத்தில் 2 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. கனமழை பெய்ததால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
|
4 நாட்களுக்கு கனமழை
இன்று காலை முதல் பூந்தமல்லி அடுத்த மாங்காடு, குன்றத்தூர், போரூர், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் மதியம் முதல் கன மழை பெய்தது. ஆலந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பரங்கிமலை, மேடவாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி, ஆகிய பகுதிகளில் காலை முதல் விட்டு, விட்டு மழை கொட்டி வருகிறது. இதனால் வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. இந்தநிலையில் வங்கக்கடலில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிக கனமழை கொட்டும்
இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என்றார். கடலோர மாவட்டங்களில் கனமழை, மிக கனமழை பெய்யும் என்று கூறிய அவர், இலங்கை, வடதமிழகத்தை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தாழ்வுநிலை நீடிப்புதாக கூறினார்.

8ம் தேதிவரை மழை
மொத்தத்தில் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தையும் சேர்த்தால் 5 நாட்களுக்கு மழை உண்டு. அடுத்த 24 மணி நேரம் என்பது நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரையாகும். ரமணன் சொல்வது படி பார்த்தால் சென்னையில் 5ம் தேதி வரை மழை உள்ளது.
|
அதிக மழை பொழிவு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 44 செ.மீ. ஆகும். ஆனால் இதுவரையில் பெய்த மழை அளவு 52 செ.மீ. அதாவது வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் 31ந் தேதி வரை உள்ளது என்றும் ரமணன் கூறினார். இன்று காலையுடன் முடிந்த 24 மணிநேரத்தில் பரங்கிப்பேட்டையில் 16 செ.மீ; மரக்காணத்தில் 15 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
The rain doesn't show any sign of slowing down Maduravoyal bypass PH road JN flooded #chennairains @ChennaiRains pic.twitter.com/G8ParBqCeX
— Sajitha Nair (@sajitharaghu) December 1, 2015 -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications