கனமழை நீடிப்பு ... சென்னை, காஞ்சி உள்ளிட்ட 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர்,நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் துவங்கியது. விடாமல் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மின்சார சேவையும் சில இடங்களில் தடைபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மைதானங்களில் தண்ணீர் குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது. சேரும் சகதியுமாக காணப்படுவதால் மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு 10 மாவட்ட பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.
சென்னையில் நேற்று பகலில் வெயிலடித்த நிலையில் மாலை நேரத்தில் வானம் இருண்டது. நள்ளிரவில் மழை கொட்டித்தீர்த்தது. அம்பத்தூர், ஆவடி, புளியந்தோப்பு, மேடவாக்கம், வேளச்சேரி, தாம்பரம், மடிப்பாக்கம், வியாசர்பாடி, சிட்லபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் அதிக அளவில் தேங்கி உள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்றும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், பள்ளி வளாகங்களில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி இருப்பதாலும், வானிலை ஆய்வு மையத்தின் மழை எச்சரிக்கையை கருத்தில் கொண்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு 3வது நாளாக விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக 30 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications