ஈரோட்டில் கொட்டித்தீர்த்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி
ஈரோடு: ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக வெயில் சுட்டெரித்தது. வெளியே நடமாட முடியாத அளவு வெயில் அடித்தது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் திடீரென கருமேகக் கூட்டங்கள் சூழ்ந்து, இடி, மின்னலுடன் மழை கொட்டியது.
மேலும் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியதும் ஈரோடு நகரில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கொல்லம்பாளையம், மூலப்பாளையம், நாடார்மேடு, கருங்கல்பாளையம், திருநகர் காலனி, பெரியார் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் வரவே இல்லை.

இதில் ஒரு சில இடங்களில் நள்ளிரவில் 1 மணிக்கு மின்சாரம் வந்தது. மேலும் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி வரை மின்சாரம் வரவில்லை. இதனால் நேற்று இரவு பொதுமக்கள் தூக்கத்தை இழந்தனர். எனினும் மழை பெய்ததையொட்டி வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
ஈரோட்டில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் பல இடங்களில் ரோட்டோரம் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தது. விளம்பர தட்டிகளும் காற்றில் பறந்தது. ஈரோடு நகரில் மட்டும் நேற்று இரவு 47 மி.மீட்டர் மழை கொட்டியது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 50 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இரவு 9.45 மணியில் இருந்து 10.45 மணி வரை ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் சிவகிரி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் குறிப்பாக விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
முன்னதாக சிவகிரி பகுதியில் மாலை 6 மணியளவில் மேகம் மஞ்சள் கலரில் மஞ்சள் பூசி குளித்தது போல் மிகவும் ரம்மியமாக காணப்பட்டது.
இதை கண்ட மக்கள் கடந்த 2 வாரமாக அடித்த வெயிலுக்கு இன்று இரவு மழை வெளுத்து கட்டப்போகிறது என்று பேசிக்கொண்டனர். அதன்படியே மழை கொட்டி தீர்த்து மக்கள் மனதை குளிர வைத்து விட்டது.
தற்போது சிவகிரி பகுதியில் கரும்பு பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த கரும்புக்கு இந்த மழை பெரிதும் உதவும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். சில இடங்களில் கரும்பு தோட்டத்தில் மழை வெள்ளம் சூழ்ந்திருந்தது.
நாளை அக்னி நட்சத்திரம் முடிவடையும் நிலையில் கோடை மழை பெய்து ஒரே நாளில் வெப்பத்தை விரட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
வெயில் கொடுமை! உடல் சூட்டை தணிக்கும் 5 அற்புத உணவுகள்! இளநீர் குடிக்கும் போது அந்த தவறை செய்யாதீங்க! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications