பயங்கர இடி... செம மழை... கிருஷ்ணகிரி மக்கள் குஷியோ குஷி - வீடியோ
வெப்பசலனத்தின் காரணமாக கிருஷ்ணகிரி, உளுந்தூர்பேட்டையில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, உளுந்தூர்பேட்டை பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தமிழகத்தில் நிலவி வரும் வரலாறு காணாத கோடை வெப்பத்தால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அக்கினி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பே தமிழகத்தின் பல பகுதிகளில் 110 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பநிலை உயர்ந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடந்தனர்.

இந்நிலையில் வெப்பசலனத்தால் கடந்த சில நாட்களாக ஆங்கங்கே மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருநெல்வேலி ஐந்தருவி, மெயின் அருவியில் நீர்கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குஷியாக உள்ளனர்.
நேற்று, கிருஷ்ணகிரி பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதுவரை வெயிலால் கஷ்டப்பட்டு வந்த மக்கள் இந்த திடீர் மழையால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இடி, மழை காரணமாக பலமணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இநிலையில் அங்கு நேற்று பெய்த மழையின் காரணமாக மக்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். வெப்பசலனத்தின் காரணமாகப் பெய்யும் மழை வறட்சி மிகுந்த இடங்களில் பெய்ய வேண்டும்மென்பதே மக்களின் பிரார்த்தனையாக உள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications