வங்கக் கடல் காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்தது.. சென்னையில் விடாமல் அடை மழை
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்துள்ளது. நாளை இது தாழ்வ மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மேலும் வலுவடைந்தால் புயலாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னையிலும் பல கடலோரப் பகுதிகளிலும் விடாமல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை நகரை விட புறநகர்ப் பகுதிகளில்தான் மழை விடாமல் தொடர்ந்து வெளுத்தெடுத்து வருகிறது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்க கடலின் தென்மேற்கு பகுதியில் நிலை கொண்டிருந்த, காற்று மேலடுக்கு சுழற்சி, காற்று அழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்திருந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக நாளை காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் தமிழ்நாடு, புதுவையில் பலத்த மழை மற்றும் மிக பலத்த மழை பெய்யும்.
நாளை காலை 8.30 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்தில் மிக பலத்த மற்றும் அளவுக்கு அதிகமான பலத்த மழை பெய்யும். காற்றழுத்த மண்டலம் புயலாக மாறுமா? என்பதை கண்காணித்து வருகிறோம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போது மழை பெய்து வருவதைப் பார்த்தால் இது புயல் சின்னமாக மாறக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. அந்த அளவுக்கு விடாமல் நேற்று இரவு முதல் சென்னைப் புறநகர்களிலும், சென்னையிலும் மழை வெளுத்தெடுத்து வருகிறது.
சென்னை தவிர கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு முக்கியச் சாலைகள் வெள்ளக்காடாகியுள்ளன. குறிப்பாக ஜிஎஸ்டி சாலையில் தண்ணீர் வெள்ளம் போல ஓடியது.
மழை அளவு
இன்று காலை 8.30 மணி வரை அதிகபட்சமாக நாகையில் 81.7 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் மீனம்பாக்கத்தில் 43.4 மி.மீ. மழையும், நுங்கம்பாக்கத்தில் 14.8 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications