சென்னை மற்றும் புறநகரங்களில் பலத்த காற்றுடன் கனமழை #Chennai
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து கொட்டித் தீர்த்தது. கிட்டத்தட்ட 1.30 மணி நேரத்திற்கும் மேலமாக நள்ளிரவில் பெய்த கனமழை 61.5 மி,மீ அளவுக்கு பதிவாகியுள்ளது.
தென் மேற்கு பருவமழை காலம் இன்னும் முடிவடையவில்லை. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) சில இடங்களில் மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் சென்னை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சாந்தோம், மயிலாப்பூர், பட்டினம்பாக்கம் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. அதோபோல் வடபழனி, சாலிகிராமம் வேளச்சேரி, அடையாறு, கிண்டி, மீனம்பாக்கம், மயிலாப்பூர், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, தி.நகர், சைதாப்பேட்டை, கோயம்பேடு, விருகம்பாக்கம் பகுதிகளிலும் கனமழை பெய்தது.
அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், சோழிங்கநல்லூர், பட்டினப்பாக்கம், மேடவாக்கம், மடிப்பாக்கம், துரைப்பாக்கம் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது. பல இடங்களில் மழை நீர் சாலைகளில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை 61.5 மி. மீ அளவாக பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத், ஒரகடம் பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்தது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications