நெல்லையில் விடிய விடிய கனமழை: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
நெல்லை மாவட்டத்தில் செவ்வாய்கிழமை முதல் லேசான சாரல் பெய்ய தொடங்கியது. தொடர்ந்து பெய்த மழை புதனன்றும் தொடர்ந்து பெய்தது. இதனால் ஓரளவுக்கு வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.
நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் 18.2மிமீ, சேரன்மகாதேவி 16, நாங்குநேரி 222, பாளையங்கோட்டை 16, ராதாபுரம் 19, செங்கோட்டையில் 1, சிவகரி 3, தென்காசி 3.1, நெல்லை 9, ஆலங்குளம் 15.2, விகேபுதூர் 5 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 82.85 அடியாக உள்ளது. அணைப்பகுதியில் 20 மிமீ மழை பதிவாகியுள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 95.50 அடியாக உள்ளது. அணைப்பகுதியில்23 மிமீ மழை பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 7.12 அடியாக உள்ளது. அணைப்பகுதியில் 36.4 மிமீ மழை பதிவாகியுளளது.
கடனாநதி அணையில் 4.2 மிமீ, ராமநதியில் 2 மிமீ, கருப்பாநதியில் 4.5 மிமீ, வடக்கு பச்சையாறில் 12மிமீ, கொடுமுடியாறு அணையில் 15 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் விடிய விடிய மழை பெய்த காரணத்தால் குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் அருவிகளில் யாரும் குளிக்க வேண்டாம் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் மெயினருவி, ஐந்தருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications