கதறக் கதறக் கொட்டித் தீர்க்கும் மழை... நெல்லை அணைகளின் நீர்மட்டம் உயர்வு!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலங்கள் ஆகும். ஆனால், இந்தாண்டு சற்று முன்னதாகவே சூரியன் தனது உக்கிரத்தை ஆரம்பித்தது. இதனால், அக்னி நட்சத்திர காலத்தில் எவ்வாறு வெயிலைத் தாங்கப் போகிறோம் என மக்கள் கவலையில் இருந்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்தது.

அடடா மழைடா... அடை மழைடா...
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு வரை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

குறைவான வெளிச்சம்...
மேலும் மேகமூட்டம் மற்றும் மழை காரணமாக பகலிலேயே வெளிச்சம் குறைந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் விளக்குகளை எரிய விட்டப்படி சென்றனர்.

மழை... மழை... மழை...
நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை மார்க்கெட், பைபாஸ் சாலை, வண்ணார்பேட்டை, புதிய பஸ் நிலையம உ்ள்பட பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் நள்ளிரவு வரை மழை பெய்தது.

நீர்மட்டம் உயர்வு...
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70 அடியாகவும், சேர்வலாறு அணையின நீர்மட்டம் 82.57 அடியாகவும் உள்ளது. அணைப்பகுதியில் 8.2 மிமீ மழை பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications