For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொட்டித் தீர்க்கும் கனமழை.. நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுக்காக்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு லீவு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளி கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நீலகிரி மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை...பள்ளிகளுக்கு விடுமுறை- வீடியோ

    நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளி கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகள் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    Heavy rain in Nilgiris: holiday for Schools and colleges in two taluks

    இதேபோல் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, நெல்லை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வருகிறது.

    இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இடைவெளியே இல்லாமல் மழை கொட்டி வருகிறது.

    இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையுடன் கடுமையான குளிரும் நிலவி வருகிறது.

    இதனால் நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகாக்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் விடுமுறை அறிவித்து ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

    English summary
    Heavy rain in Nilgiris, collector announced holiday for Schools and colleges in two taluks.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X