வெப்ப சலனம்.. தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
சென்னை: வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை இலாகா அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யலாம். அதேபோல, வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 24 மணி நேரத் தில் அதிகபட்சமாக சோழவந்தானில் 10 செ.மீ பெய்துள்ளது. உசிலம்பட்டியில் 8 செ.மீ, வாழப்பட்டியில் 7 செ.மீ, தலா 3 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
கிழக்கு மத்திய வங்க கடல் மற்றும் அதனையட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நள்ளிரவில் புயல் சின்னமாக மாறியது. அது மேலும் வலுப்பெற்று புயலாக உருவெடுத்தது.
அது அந்தமானின் போர்ட் பிளேயரில் இருந்து 380 கி.மீ. தொலைவிலும், மியான்மர் நாட்டின் யங்கூன் நகரில் இருந்து தென் மேற்கு திசையில் 680 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. நாளை இந்த புயல் அதி தீவிர புயலாக மாறி மியான்மர் கடற்கரையை தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..












Click it and Unblock the Notifications