For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று கனமழை

    சென்னை: தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

    Heavy rain in Tamil Nadu today: Met

    அஸ்ஸாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. இதேபோல், உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதி, மேற்கு வங்கத்தில் இமய மலையையொட்டிய மாவட்டங்களிலும், சிக்கிம், பிகாரிலும் செவ்வாய்க்கிழமை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    மேலும், தமிழகம், ஜம்மு-காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, சன்டீகர், ஜார்க்கன்ட், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும், கொங்கன் பகுதி, ராயலசீமா, கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.

    மகாராஷ்டிரத்தின் மத்தியப் பகுதி, மேற்கு வங்கத்தில் இமய மலையையொட்டிய மாவட்டங்கள், கர்நாடகத்தின் கடலோரப் பகுதி, குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    ஆந்திரத்தின் கடலோரப் பகுதிகள், சத்தீஸ்கர், ஒடிஸா, மேகாலயா, கேரளம், கர்நாடகத்தின் உள்பகுதிகளில் வியாழக்கிழமையும், கோவா, கொங்கன் பகுதிகளில் வெள்ளிக்கிழமையும் கனமழை பெய்யக்கூடும். நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் அன்றைய தினம் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

    English summary
    Indian Meteorological Department said in a statement that many states including Tamil Nadu, Karnataka, Jammu and Kashmir, Himachal Pradesh, Punjab will get heavy rain today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X