தமிழகம், புதுச்சேரியில் நவ.5ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 5ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 5ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.

மழையால் விடுமுறை
பலத்த மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை மற்றும் கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று இரண்டாவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழை குறைந்துள்ள போதும் தண்ணீர் தேங்கியுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 நாட்களுக்கு கனமழை
இந்நிலையில், தமிழகத்தில் நவம்பர் 5-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மன்னா வளைகுடா அருகே வணிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் பலத்த மழை
தெற்கு கடலோர ஆந்திரா, தமிழகம், புதுவை, கேரளா மற்றும் ராயலசீமா பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் புதுச்சேரி, ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் மற்றும் கேரளாவிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

ஒருசில இடங்களில் மிக கனமழை
இதனிடையே தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் கடலோர மாவட்டங்கள் அதாவது கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிககனமழை வரை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications