மகிழ்ச்சியான செய்தி... 27ம் தேதி வரை மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் தகவல்
Recommended Video

சென்னை: தமிழகத்தில் 27ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப சலனம் காரணமாக வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு அதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

அதிகபட்சமாக நேற்று சின்னகல்லாரில் 70 மிமீ, தேவாலா 60 மிமீ, வால்பாறை 40 மிமீ, தாமரைப்பாக்கம், பொன்னேரி, பெரும்புதூர், பெரியாறு, செங்கல்பட்டு, நடுவட்டம், மாமல்லபுரம், காஞ்சிபுரம், அரக்கோணம் 10 மி.மீ மழை பெய்துள்ளது.
சென்னை மற்றும் சென்னையில் புற நகரில் நேற்று மாலையில் சில இடங்களில் திடீர் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. முக்கிய சாலைகளிலும், புறநகரில் சில பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள வளி மண்டல காற்று சுழற்சி மேலும் அதே இடத்தில் நீடிப்பதால், தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தமிழகத்தை ஒட்டிய கேரள பகுதி மற்றும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இந்த நிலை 27ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், தென்மேற்குப் பருவமழை வலுப்பெற்று வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications