மதுரையில் இரவு முழுவதும் விட்டு விட்டு வெளுத்து வாங்கிய கனமழை
மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்தது.
மதுரை: மதுரை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு விட்டு விட்டு நல்ல மழை பெய்தது.
மதுரையில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பகல் நேரங்களில் நகர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. நிதானமாக பெய்த மழையை மதுரை மக்கள் ரசித்தனர். அதேநேரம் சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கியது.

பெரியார் நிலையம், சிம்மக்கல், காளவாசல், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. காமராஜர் சாலை, கோரிப்பாளையம், அண்ணா நகர் சாலையில் தேங்கிய மழைநீரால் வாகனங்கள் வேகமாக செல்வதற்கு சிரமப்பட்டனர்.
இதனிடையே மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. காளவாசல், பழங்காநத்தம், ஆரப்பாளையம், நாகமலை புதுக்கோட்டை, செக்கானூரணி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. லேசான மழைக்கு கூட தாங்காத மதுரை சாலைகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளதால் ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் தேங்கி காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications