சென்னை மற்றும் புறநகரங்களில் காற்றுடன் கனமழை !
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நாகை, திருவாரூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. சென்னையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக வானம் மேகமூட்டத்துடன், அவ்வப்போது மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

சென்னை, நெற்குன்றம், மதுரவாயல்,கோயம்பேடு வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாசாலை, தி.நகர். தேனாம்பேட்டை, எழும்பூர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, அண்ணா சாலை, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
அதேபோல் ஆவடி, அம்பத்தூர், நங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பொழிச்சலூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. எதிர்பாராமல் பெய்த கனமழையினால் முன்னெச்சரிக்கை இல்லாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் சாலைகள் தண்ணீர் தேங்கி இருந்ததால் அலுவலகம் சென்று வீடு திரும்பிய வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications