தொடர் மழை எதிரொலி: சென்னை ஆவடி வெள்ளானூர் ஏரி உடைந்து வெள்ளப்பெருக்கு
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்துவருவதால், ஆங்காங்கே வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 3 நாள் கனமழையால் நிறைந்த ஆவடி வெள்ளனூர் ஏரி கரை உடைந்து வெள்ளப்பெருக்கு
திருவள்ளூர்: தொடர் கனமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்காங்கே மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் 3 நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழைக்கு தாங்காத ஆவடி வெள்ளனூர் ஏரி உடைந்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களாக தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் முழுக்க கனமழை வெளுத்து வாங்கியது. நல்ல மழை பெய்ததால் ஆவடியில் உள்ள வெள்ளனூர் ஏரி நிறைந்து உடைந்தது. இதனையறிந்த வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் மூட்டைகளை கொண்டு தண்ணீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கனமழை எதிரொலியாக திருவள்ளூர் மாவட்ட ஏரிகள் வேகவேகமாக நிரம்பி வருகின்றன. சோழவரம், பூண்டி ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பால் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோழவரம் ஏரியில் 5 மாதங்களுக்கு பிறகு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 881 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 5 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 60 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இப்போது வரை தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை 221 மி.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் தினமும் மாலை நேரங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து தண்ணீர்ப் பற்றாக்குறை நீங்களும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
இதென்ன உத்தர பிரதேச மாடலா? கும்மிடிப்பூண்டி சிறுமி பலாத்காரம்.. ரகசியமாக உடல் அடக்கம்! கொடுமை -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications