சென்னைக்கு வந்தாச்சுதான்.... பெருங்களத்தூரை எப்ப தாண்டுவோம்.... கடும் நெரிசலில் மக்கள் அவதி!
கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சொந்த ஊர் சென்றவர்கள் இன்று சென்னை திரும்பியதால்,பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: நான்கு நாட்கள் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக சென்னைக்கு திரும்பியதால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி சாலையில் ஊரப்பாக்கத்தில் இருந்து பெருங்களத்தூர் வரையில் வாகனங்கள் நீண்டதூரம் அணிவகுத்து நிற்பதால் சென்னை திரும்பியவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தென்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் தங்கி படித்து, வேலை செய்து வருகின்றனர். பண்டிகை, தொடர்விடுமுறையை கொண்டாட சொந்த ஊர் செல்வது வழக்கம்.

சென்னையில் நெரிசல்
ஆகஸ்ட் 12 முதல் 15 வரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு சென்றனர். இதனால் கடந்த 11ஆம் தேதி மாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து சென்றன.

போக்குவரத்து நெரிசல்
சென்னை போன்ற முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அன்றாட பிரச்சினையாக மாறிவருகிறது. இந்நிலையில் தொடர்விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற மக்கள் பலரும் இன்று அதிகாலையில் சென்னைக்கு திரும்பினர்.

வரிசை கட்டிய வாகனங்கள்
இதனால் இன்று அதிகாலை காலை முதல் புறநகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புறநகர் பகுதியாக ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் பகுதிகளில் உள்ள சாலைகள் குறுகலாகவும் சேதமடைந்தும் இருப்பதால் வாகனங்கள் நத்தைபோல் ஊர்ந்தன.

பயணிகள் அவதி
பேருந்துகள், கார்கள், இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். காலையில் அலுவலகம் செல்லவும், பள்ளி மற்றும் கல்லூரி செல்லவும் திட்ட மிட்டிருந்தவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications