மக்களே உஷார்.. மதுரையில் இன்று முதல் 'ஹெல்மெட்' கட்டாயம் !
மதுரையில் இன்று முதல் இரு சக்கர வாகனத்தில் பயணிப்போர் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும்.
மதுரை: மதுரையில் இன்று முதல் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும். தவறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து, ஆவணங்கள் பறிமுதல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை நகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதுரையில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் எவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்கவேண்டும். தலைக் கவசம் இன்றி பயணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். இதன்மூலம் குற்றத்துக்கு ரூ.100, 2-வது முறை குற்றத்துக்கு ரூ. 300 அபராதம் விதிக்கப்படும்.

விபத்துக்கள் நடக்கும் போது, தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வோர் அதிகம் உயிரிழக்கின்றனர். தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் செல்வது 1.7.2015 முதல் உயர் நீதிமன்றத்தால் கட்டாயமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தொடக்கத்தில் மதுரை மாநகரில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் அனைவரும் தலைக்கவசம் அணிந்து சென்றனர். இது படிப்படியாக குறைந்தது.
கடந்த 2016-ல் மதுரை மாநகரில் விபத்து்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 225 பேர். இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்து இறந்தவர்களில் 90 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியாதவர்கள். ஆகவே தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இரு சக்கர வாகனத்தில் நீங்கள் பயணம் செய்வது மட்டுமின்றி, உங்களின் உற்றார், உறவினர்களும் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்ய அறிவுரை வழங்கவேண்டும்.
2016-ல் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற 1,34, 954 பேர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் அனைவரும் தலைக்கவசம் அணிவதை உறுதி செய்யும் பொருட்டு மதுரையில் இன்று முதல் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் அனைவர் மீதும் உயர் நீதிமன்ற உத்தரவுபடி வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல் செய்தல், ஓட்டுநர் உரிமம் ரத்து உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications