டி.என்.பி.எஸ்.சி தேர்வு வெளிப்படையாக இருக்கவேண்டும்- ஹைகோர்ட்
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
எழுத்து தேர்வில் கலந்துகொண்டவர்களின் மதிப்பெண் பட்டியலை வெளியிட்ட பின்னரே, நேர்முக தேர்வு நடவடிக்கையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

தொழிற்சாலை சார்பு பணி உதவி பொறியாளர் தேர்வை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடத்தியது. இந்த தேர்வு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.விஜய் கீர்த்தி, பி.தமிழரசி ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தமிழக தொழில்துறையின் உதவி என்ஜினீயர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எழுத்து தேர்வு நடத்தியது. இந்த தேர்வின் மதிப்பெண் பட்டியலை வெளியிடாமல், சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்கு வரவேண்டிய விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியலை கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. அந்த பட்டியலில் எங்கள் பெயர் இருந்தது.
இதன்பின்னர், சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் கலந்துகொண்டவர்களில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றார்கள் என்ற விவரங்களை வெளியிடவில்லை. ஆனால், 82 பேரை மட்டும் நேர்முக தேர்வுக்கு வரும்படி அழைப்பு விடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதில் 80 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 80 பேருடைய மதிப்பெண் விவரங்களை மட்டும் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. எனவே, தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் தனது உத்தரவில்,
இந்த வழக்கு விசாரணையின்போது, டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எழுத்து தேர்வு மதிப்பெண் பட்டியலை தாக்கல் செய்தார். அதில், நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் அதிக மதிப்பெண் எடுத்திருந்தனர். அதை மனுதாரர் வக்கீல்களும் ஒப்புக்கொண்டார். எனவே, இந்த வழக்கு தோல்வியடைந்துவிட்டது.
அதே நேரத்தில், டி.என்.பி.எஸ்.சி. மேற்கொண்டுள்ள இந்த தேர்வு நடைமுறை அதிருப்தி அளிக்கிறது. பொதுவாக எழுத்து தேர்வு முடிந்த பின்னர், அந்த தேர்வின் மதிப்பெண் விவர பட்டியல்களை முதலில் வெளியிட வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குருப் 4 தேர்வில் அதிக நபர்கள் எழுத்து தேர்வில் கலந்துகொள்கிறார்கள். அந்த குருப் 4 எழுத்து தேர்வின் மதிப்பெண் விவரங்களை வெளியிடும்போது, உதவி பொறியாளர் பதவிக்கு குறைவான எண்ணிக்கையில் கலந்துகொண்டவர்களின் மதிப்பெண் பட்டியலை வெளியிடாதது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால், தேர்வில் கலந்துகொண்டவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்தின் நடவடிக்கையின் மீது சந்தேகம் ஏற்படுகிறது. அதனால், அவர்கள் இந்த நீதிமன்றத்தின் கதவினை தட்டுகின்றனர். இதை தவிர்க்க வேண்டும் என்றால், டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வு நடவடிக்கை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.
எனவே, இனிவரும் காலங்களில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் எழுத்து தேர்வினை நடத்தினால், அந்த தேர்வின் மதிப்பெண் பட்டியலை வெளியிட்ட பின்னரே, நேர்முக தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். மேலும், நேர்முக தேர்வு நடத்துவதற்கு முன்பு சான்றிதழ் சரிபார்க்கும் நடவடிக்கையை மேற்கொள்வது என்பது தேவையற்றது. சான்றிதழ் சரிப்பார்க்கும் பணி தேர்வின் இறுதி கட்டத்தில்தான் மேற்கொள்ள வேண்டும். எனவே உதவி பொறியாளர் பதவிக்கு எழுத்து தேர்வு எழுதிய அனைவரது மதிப்பெண் விவரங்களையும் உடனடியாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட வேண்டும். இந்த வழக்கை முடித்துவைக்கிறேன் என்று கூறி உத்தரவிட்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications