தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற ஹைகோர்ட் இடைக்காலத் தடை!

சீமைகருவேல மரங்களை வெட்டுவதற்கு, தமிழகம் முழுவதும் இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்ற, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மதுரை மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. அவரவர் செலவில் அகற்ற வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

High Court interim ban to removal of karuvelam trees in tn

இந்நிலையில், சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக, ஐ.ஐ.டி குழுவை அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் மேகநாதன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சீமைகருவேல மரங்களை வெட்டுவதற்கு, தமிழகம் முழுவதும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து வழக்கை, மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு, மாற்றி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து வழக்கு விசாரணை வருகின்ற மே 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+